ADDED : டிச 09, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளைத் திறக்க துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பெஞ்சல் புயல், கனமழை காரணமாக, கடந்த 29ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இன்று 9ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என, கலெக்டர் பழனி அறிவித்திருந்தார்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளும் இன்று திறக்கப்படுகிறது.
முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்து, துாய்மைப் பணிகள் செய்து மேற்கொள்ளப்பட்டு பள்ளி வளாகங்களில் பிளீச்சிங் பவுடர் போட்டு தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 1,795 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு, வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.