/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தானியங்கி விவசாய 'பம்ப் செட்' அரசு மானியத்தில் வழங்க ஏற்பாடு
/
தானியங்கி விவசாய 'பம்ப் செட்' அரசு மானியத்தில் வழங்க ஏற்பாடு
தானியங்கி விவசாய 'பம்ப் செட்' அரசு மானியத்தில் வழங்க ஏற்பாடு
தானியங்கி விவசாய 'பம்ப் செட்' அரசு மானியத்தில் வழங்க ஏற்பாடு
ADDED : நவ 25, 2024 04:43 AM
விழுப்புரம் : விவசாயிகளுக்கு, தானியங்கி மின் மோட்டார்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக் குறிப்பு:
விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மின்சார பம்பு செட்டுகளை, தொலைவில் இருந்து அல்லது வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலம் இயக்க முடியும். மேலும், இந்த அமைப்பை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
கிணற்றில் நீர் இல்லாத போது தானாகவே நீர் இறைப்பதை நிறுத்தி விடும். விவசாயிகள் தங்கள் மொபைல் போன்களிலிலே வோல்டேஜ், கரண்ட், மோட்டார் ஓடுதல் நேரம், மோட்டாரின் நிலை ஆகியவற்றை பார்க்க முடியும். தீ மற்றும் திருட்டுக்கான அழைப்பு எச்சரிக்கை மூலம் கைப்பேசிக்கு அனுப்பப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில், 2024-25ம் நிதி ஆண்டிற்கு 141 தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்துதல் திட்ட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதில், பொது பிரிவினருக்கு 131, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கு 10 தானியங்கி மோட்டார் பம்ப் செட் வழங்கப்படும். பொது பிரிவினருக்கு 40 சதவீதம் அல்லது 5000 ரூபாயும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது 7000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் கூடுதல் உதவி செயற் பொறியாளர் அலுவலகம், திண்டிவனம் அடுத்த மானுாரில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில், நேரில் அணுகி விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.