sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஏற்பாடு: நிலத்தடி நீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை

/

ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஏற்பாடு: நிலத்தடி நீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை

ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஏற்பாடு: நிலத்தடி நீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை

ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஏற்பாடு: நிலத்தடி நீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை

1


ADDED : ஏப் 17, 2025 05:17 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில் செழித்து வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கட்டுப்பாட்டில் 624 ஏரிகள் உள்ளது. இதில், விழுப்புரத்தில் 506 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 118 ஏரிகளும் உள்ளது. இரு மாவட்ட ஏரிகளிலும் தற்போது அளவுக்கு அதிகமாக சீமை கருவேல மரங்கள் பல ஏக்கர் பரப்பளவில் பரவி வளர்ந்துள்ளது.

சீமை கருவே மரங்கள் 12 மீட்டர் உயரம், நிலத்திற்கு அடியில் கருவேல மரத்தின் வேர் (53 மீட்டர்), 175 அடி நீளம் செல்ல கூடியது. இதனால் மற்ற மரங்களை விட, சீமை கருவேல மரத்தின் வேர் ஆழத்திற்கு சென்று, மற்ற அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இவை ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மற்ற மரங்கள், தாவரங்களின் வளர்ச்சியை தடுக்க கூடியது.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், கால்நடைகள் ஏரிகளில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை நம்பி உள்ளன. இந்த தண்ணீரும் சீமை கருவேல மரங்களால் உறிஞ்சும் சூழல் உருவாகி உள்ளது. மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரிகள் சீரமைப்பு பணிகளை பெண்கள் மேற்கொண்டனர். ஆனால் ஏரி பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டவர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணம் வரவில்லை. ஏரிகள் மராமத்து பணிகளும் நடக்கவில்லை.

சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் ஏரிகளில் தண்ணீர் மட்டத்தை உயர்த்தவும், பிற தாவரங்கள் வளர வாய்ப்பு உருவாகும். இதனால் விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேறுடன் அகற்ற பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மே மாதம் துவக்கத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை ஜே.சி.பி., மூலம் வேறுடன் அகற்றி, நீரை பாதுகாக்கவும், மற்ற தாவரங்கள் வளர வழிவகை செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us