/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வட்டார வள மையத்தில் கலைத் திருவிழா போட்டி
/
வட்டார வள மையத்தில் கலைத் திருவிழா போட்டி
ADDED : பிப் 15, 2024 05:44 AM

மரக்காணம் : மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் வட்டார வள கல்வி மையத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சிவசிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர் கோவர்தன் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சம்பத் வரவேற்றார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனவேல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், 'நம் பள்ளி; நம் பெருமை' திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்கியவர்ளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

