/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாய் ெஷட்டர்கள் திறக்காததால் ஏரிக்கு வராமல் ஆற்றில் கலக்கும் தண்ணீர்

ADDED : அக் 14, 2024 04:01 AM

செஞ்சி: துறிஞ்சல் ஆற்றில் உள்ள நந்தன் கால்வாய் அணைக்கட்டு ெஷட்டர்களை திறக்காமல் இருப்பதால் தண்ணீர் ஏரிகளுக்கு வராமல் மீண்டும் ஆற்றில் கலந்து விடுவதாக நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் பனமலை ஏரிக்கு தண்ணீர் வர வேண்டிய நந்தன் கால்வாயில் தண்ணீர் வரவில்லை.
இதையடுத்து நேற்று நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கள ஆய்வு செய்தனர். முன்னாள் சேர்மன் ரங்கநாதன், ஒருங்கிணைப்பாளர் அறவாழி, கிளை ஒருங்கிணைப்பாளர் கார்வண்ணன், ஆலோசகர் குப்புசாமி ஆகியோர் நந்தன் கால்வாய் துவங்கும் கீரனுார் அணைக்கட்டில் இருந்து தேவதானம்பேட்டை வனப்பகுதி வரையில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப்பின் அவர்கள் கூறுகையில், 'திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் துறிஞ்சல் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. கீரனுார் அணைக்கட்டில் உள்ள நந்தன் கால்வாய் அணைக்கட்டின் இரண்டு ெஷட்டர்களையும் திறக்காமல் இருப்பதால் தண்ணீர் ஏரிகளுக்கு வராமல் மீண்டும் ஆற்றில் செல்கிறது.
தேவதானம்பேட்டை வனப்பகுதியில் கால்வாய் துார்ந்து மழை நீர் தேங்கியுள்ளது. நந்தன் கால்வாயில் உள்ள ெஷட்டர்கள் பல இடங்களில் பராமரிப்பின்றி உள்ளன. இவற்றை சரி செய்ய நீர்வளத்துறையினர் வடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.