/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாதனமாக மதுபாட்டில்கள் கடத்திய ஆசாமி கைது
/
நுாதனமாக மதுபாட்டில்கள் கடத்திய ஆசாமி கைது
ADDED : பிப் 16, 2025 03:09 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நுாதன முறையில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில், நடந்து வந்த நபரை, போலீசார் பிடித்து சோதனை செய்ததில், உடலில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை வைத்து (சலோ டேப்) பிளாஸ்டிக் கவரில் ஒட்டி பஸ்சில் ஏறி கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அவர், விழுப்புரம், ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த பாவாடை மகன் நாகமணி,40; என்பது தெரிந்தது. இவர், புதுச்சேரி மாநில மதுபானங்களை பதுக்கி, அப்பகுதியில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கொண்டு சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாகமணியை கைது செய்து, 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

