/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது
/
மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது
ADDED : அக் 21, 2024 10:43 PM
மயிலம் : மயிலம் அருகே கடன் தகராறில் மூதாட்டியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ் மனைவி மல்லிகா, 57; இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் பிரகாஷிடம் கடன் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் மல்லிகாவின் வீட்டிற்கு வந்து பிரகாஷ் கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டது.
இதில் பிரகாஷ், 40; இவருடைய மனைவி ரேவதி, 38; மகன் ஜெகதீஷ், 16; ஆகியோர் மல்லிகாவை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மல்லிகா திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து மயிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பிரகாஷ் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.