/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்டசபை மதிப்பீட்டுக் குழு ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
சட்டசபை மதிப்பீட்டுக் குழு ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சட்டசபை மதிப்பீட்டுக் குழு ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சட்டசபை மதிப்பீட்டுக் குழு ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 05, 2024 12:32 AM

விழுப்புரம் : சட்டசபை பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி சந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், மயிலம் சிவக்குமார், ஆரணி ராமச்சந்திரன், எக்மோர் பரந்தாமன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அமைச்சர் மஸ்தான், புகழேந்தி எம்.எல்.ஏ., கலெக்டர் பழனி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணி உட்பட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களோடு, ஆய்வு நடத்தினர்.
பின், வருவாய்த் துறை சார்பில் 20 நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச்சான்று உட்பட பல்வேறு துறைகள் சார்பில் 32 பயனாளிகளுக்கு 72 ஆயிரத்து 96 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சட்டசபை முதன்மைச் செயலர் சீனிவாசன், கூடுதல் செயலர் சுப்ரமணியம், துணைச் செயலர் சிவகுமரன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.