ADDED : அக் 03, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலம் முண்டியம்பாக்கத்திற்கு வந்த யூரியா மூட்டைகளை வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு என்.எப்.எல்., நிறுவனத்தில் இருந்து 1,333 மெ.டன் யூரியா உர மூட்டைகள் வந்தது. இந்த உர மூட்டைகளை தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு 350 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 302 மெ.டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 126 மெ.டன், கடலுார் மாவட்டத்திற்கு 479 மெ.டன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 76 மெ.டன் உர மூட்டைகள் அந்தந்த குடோன்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.