/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விடுமுறை தினங்களில் விதிமீறல்; தொழிலாளர் துறையினர் ஆய்வு
/
விடுமுறை தினங்களில் விதிமீறல்; தொழிலாளர் துறையினர் ஆய்வு
விடுமுறை தினங்களில் விதிமீறல்; தொழிலாளர் துறையினர் ஆய்வு
விடுமுறை தினங்களில் விதிமீறல்; தொழிலாளர் துறையினர் ஆய்வு
ADDED : அக் 03, 2025 07:31 AM
விழுப்புரம்; விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தொழிலாளர் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதி மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் குழுவினர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, தேசிய விடுமுறை நாளான (காந்தி ஜெயந்தி) நேற்று, அரசு சட்ட விதிகள்படி பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல், மாற்று விடுமுறை அளிக்காமல், பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் குறித்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 120 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், பல நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு, அந்நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், சட்டமுறை எடையளவு சட்ட விதிகள்படி ஆய்வு மேற்கொண்டு 25 கடைகளில் எடை குறித்த தவறுகள் கண்டறியப்பட்டு, இணை கட்டண நடவடிக்கை எடுக்கப்பட்டது.