ADDED : நவ 16, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: கிளியனுார் அடுத்த ஓமந்துார் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கணேசன். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சரவணன்.
இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவரும், அடித்துக்கொண்டபோது, அதே பகுதியைசேர்ந்த வையாபுரி மனைவி பானுமதி, 60; என்பவர் தடுக்க சென்றுள்ளார்.
அப்போது, சரவணன் பானுமதியை தாக்கியதில் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.
இது குறித்து புகாரின் பேரில், கிளியனுார் போலீசார், சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

