/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட நுாலகத்தில் இளைஞர் மீது தாக்குதல் : விழுப்புரத்தில் பரபரப்பு

ADDED : செப் 20, 2025 07:02 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் இளைஞரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட மைய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர், அரசு போட்டிதேர்வுகளுக்கு தினந்தோறும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அங்கு இளைஞர் ஒருவர் சத்தமாக படித்துள்ளார். அப்போது, மற்றொரு இளைஞர், சத்தம்போடாமல் படிக்குமாறு கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதனால், சத்தமாக படித்த இளைஞரை, மற்றொரு இளைஞர் தாக்கினார். இதையறிந்த அங்கு படித்த சக இளைஞர்கள் திரண்டு, தாக்கிய இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவலறிந்த தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை கண்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின், இதுபோன்று மோதலில் ஈடுபடக்கூடாது என இளைஞர்களை எச்சரித்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.