/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அடிப்படை வசதி கேட்டு மறியலுக்கு முயற்சி; போலீஸ் பேச்சு வார்த்தையால் வாபஸ்

ADDED : அக் 14, 2025 06:57 AM
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி தொகுதி திருக்குணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரி சாலை மறியல் செய்ய முயன்ற பெண்களிடம் போலீசார் போ்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த காணை ஒன்றியம். திருக்குணம் ஊராட்சியில் உள்ள திருக்குணம், டி.கொசப்பாளையம் சுடுகாட்டிற்கு மினி டேங்க் வசதி, பழுதடைந்த பாலத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் 12:00 மணியளவில் திருக்குணம் கல்மண்டபம் எதிரே கெடார் சாலையில் ஊராட்சி தலைவர் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், மற்றும் போலீசார் அவர்கள் சாலை மறியல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி,அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கொடுக்க பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வேண்டும்.
அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என உறுதி கூறியளித்ததை தொடர்ந்து, பிற்பகல் 1:45 மணிக்கு பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.