/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவுரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
/
அவுரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 28, 2025 01:03 AM

செஞ்சி : அவுரி பயிருக்கு நியாயமான விலை கிடைக்க முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வல்லம் கொங்கப்பட்டு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம், விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் சக்திவேல் அளித்த மனுவில்; கடந்த ஆண்டு அவுரி ஒரு கிலோ அதிகபட்சம் ரூ. 250, குறைந்தபட்சம் ரூ.150 க்கு வியாபாரிகள் வாங்கினர். இந்தாண்டு ரூ. 70க்கு வாங்குகின்றனர். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. அவுரி பயிருக்கு நியாயமான விலை கிடைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். திண்டிவனம் சிப்காட்டில் அவுரிக்கு தனி தொழிற்சாலை கொண்டு வர வேண்டும், அவுரி ஏக்கருக்கு 8 கிலோ விதையை முழு மானியத்துடன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.