/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இத்தாலி நாட்டு பிரதிநிதிகளுடன் ஆரோவில் செயலர் கலந்துரையாடல்
/
இத்தாலி நாட்டு பிரதிநிதிகளுடன் ஆரோவில் செயலர் கலந்துரையாடல்
இத்தாலி நாட்டு பிரதிநிதிகளுடன் ஆரோவில் செயலர் கலந்துரையாடல்
இத்தாலி நாட்டு பிரதிநிதிகளுடன் ஆரோவில் செயலர் கலந்துரையாடல்
ADDED : டிச 20, 2024 06:00 AM

வானுார்: ஆரோவில்லில், புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு, இத்தாலி நாட்டு பிரதிநிதிகளுடன் அறக்கட்டளை செயலர் கலந்துரையாடல் நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் புதிய திட்டங்களை கொண்டு வரும் முயற்சியில், அறக்கட்டளை நிர்வாகம் இறங்கியுள்ளது.
மெய்நிகர் அருங்காட்சியகம் உட்பட ஆரோவில்லில் புதிய திட்டங்கள் தொடர்பாகவும், ஆரோவில் கலாசாரம், ஆன்மிக வளர்ச்சி தொடர்பாக கருத்தரங்கை 'ஆரோவில் அழைக்கிறது' தலைப்பில் நேற்று நடத்தியது.
இதில், இத்தாலி நாட்டு பிரதிநிதிகளுடன் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி, காணொலி மூலம் கலந்துரையாடி, ஆரோவில் செயல்படுத்தும் முக்கிய திட்டங்களை எடுத்துரைத்தார்.
குறிப்பாக, பயிற்சி மற்றும் ஆன்லைன் படிப்புகள் மூலம் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்க மாணவர் பரிமாற்ற நிகழ்வுகள் மற்றும் கலாசார பரிமாற்றம் நடைபெற உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டில் இணைந்து செயல்பட உள்ளது. அரவிந்தர், அன்னை ஆகியோரின் வாழ்க்கை மற்றும் பணிகளை டிஜிட்டல் அனுபவத்தில் தரும் மெய்நிகர் அருங்காட்சியம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆரோவில் கொள்கைகளை ஊக்குவிக்க முக்கிய இந்திய நிறுவனங்களில் கல்வி பதவிகளை நிறுவவும், கல்வியில் ஆராய்ச்சி திட்டங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும் செயலர் தெரிவித்தார்.