sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோர்ட் உத்தரவில் கோவிலுக்கு 'சீல்': செஞ்சி அருகே அதிகாரிகள் அதிரடி

/

 கோர்ட் உத்தரவில் கோவிலுக்கு 'சீல்': செஞ்சி அருகே அதிகாரிகள் அதிரடி

 கோர்ட் உத்தரவில் கோவிலுக்கு 'சீல்': செஞ்சி அருகே அதிகாரிகள் அதிரடி

 கோர்ட் உத்தரவில் கோவிலுக்கு 'சீல்': செஞ்சி அருகே அதிகாரிகள் அதிரடி

2


UPDATED : மார் 15, 2026 06:17 AM

ADDED : மார் 15, 2026 04:39 AM

Google News

UPDATED : மார் 15, 2026 06:17 AM ADDED : மார் 15, 2026 04:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே குளம் புறம்போக்கில் கட்டியுள்ள கோவிலுக்கு கோர்ட் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தில் அம்மச்சார் அம்மன், முனீஸ்வரன் கோவில் கட்டியுள்ளனர்.

இந்த கோவில், குளம் புறம்போக்கில் கட்டியிருப்பதால் கோவிலை அகற்ற வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த குருசந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் கோவிலை அகற்ற கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஜனவரி மாதம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கோவிலை அகற்ற உத்தரவிட்டிருந்தார்.

எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறையினர் கோவிலை அகற்றாமல் கால தாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கோவில் கட்டிய தரப்பினர் கோவிலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தலைமை செயலகத்தில் மனு கொடுத்தன ர். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், குருசந்திரன் மீண்டும் கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத கலெக்டர், தாசில்தார் உட்பட 4 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நேற்று செஞ்சி தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த் துறையினர் கோவிலுக்கு 'சீல்' வைத்தனர். பி.டி.ஓ., ராமதாஸ், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us