/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : மார் 15, 2026 04:27 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனைக்கான கருவியை கலெக்டர் வழங்கினார்.
திண்டிவனத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் 3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விரைந்து ரத்த பரிசோதனை செய்வதற்கான கருவி, திண்டிவனம், செஞ்சி, வளவனுார், மரக்காணம் ஆகிய மருத்துவமனைகளுக்கு வழங்கி கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் பேசினார்.
விழாவில், திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், விழுப்புரம் இணை இயக்குநர் (நலப்பணி) சாந்தகுமாரி, தனியார் காலணி நிறுவன மேலாளர் அருள், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் முரளிஸ்ரீ, துணை இயக்குநர் (குடும்பநலம்) பத்மாவதி, மருத்துவ நிலைய அலுவலர் கோதை ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

