/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குற்றவாளியை துரத்தி சென்று மயங்கி விழுந்த ஏட்டு மரணம்
/
குற்றவாளியை துரத்தி சென்று மயங்கி விழுந்த ஏட்டு மரணம்
குற்றவாளியை துரத்தி சென்று மயங்கி விழுந்த ஏட்டு மரணம்
குற்றவாளியை துரத்தி சென்று மயங்கி விழுந்த ஏட்டு மரணம்
ADDED : மார் 17, 2025 01:58 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த வி.தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 40; விக்கிரவாண்டி காவல் நிலைய ஏட்டு.
நேற்று முன்தினம் அதிகாலை உடன் பணிபுரியும் மஞ்சுநாதன் என்ற போலீஸ்காரருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஆவுடையார்பட்டு அருகே கஞ்சா விற்ற மூன்று பேரை பிடிக்க முயன்ற போது, ஒருவர் தப்பியோடினார்.
தொரவி ஓடை அருகே சென்றபோது தப்பியோடிய நபர் வந்ததை பார்த்து அவரை பிடிக்க முயன்றார். அந்த நபர் போலீசை பார்த்ததும் ஓடையில் இறங்கி ஓடினார்.
துரத்திச் சென்ற சீனிவாசனுக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். சக போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், சீனிவாசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். சீனிவாசனின் பணியை பாராட்டி, சமீபத்தில் எஸ்.பி., பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த போலீஸ் ஏட்டு சீனிவாசன் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின், 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.