/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா
/
ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா
ADDED : ஆக 23, 2025 05:02 AM

செஞ்சி : ஆலம்பூண்டியில் ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி அடுத் த ஆலம்பூண்டியில் கடந்த இரண்டு மாதம் முன்பு கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து நடந்த சமாதான கூட்டத்தில் ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முடிவு செய்தனர்.
இதன்படி, ஆட்டோ ஸ்டாண்டைவேறு இடத்திற்கு மாற்றினர். ஆட்டோ ஸ்டேண்டில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற் றினர்.
ஆட்டோ ஸ்டாண்ட் வேறு இடத்திற்கு மாற்றியதால் வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சமாதான கூட்டம் நடந்தது. இதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து நேற்று ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், சங்க தலைவர் முருகன் தலைமையில், செயலாளர் திருநாவுக்கரசு, கவுரவ தலைவர் செல்வகுமார் மற்றும் குடும்பத்தினர் பழைய ஆட்டோ ஸ்டேண்டில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக மா.கம்யு., கட்சி நிர்வாகிகள் தர்ணாவில் கலந்து கொண்டனர்.
தர்ணா செய்தவர்களுடன் தாசில்தார் துரைச்செல்வம், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் 2ம் தேதி மீண்டும் சமாதான கூட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து மாலை 6:00 மணியளவில் தர்ணாவை கைவிட்டனர்.