UPDATED : அக் 15, 2026 04:57 PM
ADDED : அக் 15, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் வெற்றி பயணத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் த.வெ,க., அரசின் வெற்றி பயண திட்டத்தில் பெண்களுக்கு இலவசமாக பஸ் வசதி வழங்கப்பட்டது.
இதனால் ஆட்டோக்களுக்கு போதிய சவாரி கிடைக்காத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி,
இத்திட்டத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டையில், ஆட்டோ டிரைவர்கள் நல சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு நாள் ஆட்டோக்களை இயக்காமல் கடை வீதியில் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர்.
