/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.வி., தங்க மாளிகை செஞ்சியில் திறப்பு
/
ஏ.வி., தங்க மாளிகை செஞ்சியில் திறப்பு
ADDED : ஏப் 18, 2025 04:39 AM

செஞ்சி: செஞ்சி திருவண்ணாமலை சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட ஏ.வி., தங்க மாளிகை ஏ.சி., ஷோரும் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவில் வழக்கறிஞர் ஆத்மலிங்கம், தலைமையாசிரியை சிந்தாமணி வரவேற்றனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன் ரிப்பன் வெட்டி நகை மாளிகையை திறந்து வைத்தார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். வடலுார் சிவக்குமார், சாவித்திரி தம்பதியினர் பெற்றுக் கொண்டனர்.
சின்னத்திரை நடிகை லட்சுமி பிரியா ஆன்லைன் விற்பனையை துவக்கி வைத்தார். வடலுார் வள்ளலார் பள்ளி பி.டி.ஏ., தலைவர் ராமானுஜம், வழங்கறிஞர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, அரசு வழக்கறிஞர்கள் கிருஷ்ணன், தமிழ்செல்வி, தொழிலதிபர் ரமேஷ், வழக்கறிஞர் கதிரவன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் கலியமூர்த்தி, பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் குறிஞ்சிவளவன், அ.தி.மு.க., நிர்வாகிகள் மணிமாறன், கமலக்கண்ணன் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வங்கி மேலாளர்கள், வர்த்தகர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் வினோத், அருள்ஒளி வினோத் ஆகியோர் நன்றி கூறினர்.