/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.வி.டி. இன்டஸ்ட்ரியல் டிரேடர்ஸ் திறப்பு விழா
/
ஏ.வி.டி. இன்டஸ்ட்ரியல் டிரேடர்ஸ் திறப்பு விழா
ADDED : நவ 13, 2025 10:43 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தில், ஏ.வி.டி. இன்டஸ்ட்ரியல் டிரேடர்ஸ் நிறுவன திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட சேர்மன் தசரதன் தலைமை தாங்கினார். சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் மாநில துணைத் தலைவர் பிரகாஷ், மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர்கள் வெங்கடேஷ், ராஜேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, மூத்த வழக்கறிஞர் தயானந்தம் முன்னிலை வகித்தனர். நிறுவன உரிமையாளர் கோவிந்தவாசன் வரவேற்றார்.
முருகப்பா குழுமத்தின் அங்கீகாரம் பெற்ற விநியோ கஸ்தரான ஏ.வி.டி. இன்டஸ்ட்ரியல் டிரேடர்ஸ் நிறுவனத்தை இ.எஸ்.கல்விக் குழும நிறுவனர், தொழிலதிபர் சாமிக்கண்ணு திறந்து வைத்தார்.
விழாவில், சிட்டி யூனியன் வங்கி சீனியர் மேனேஜர் ஆனந்த், முருகப்பா குழுமத்தின் தமிழக ஏரியா விற்பனை மேலாளர் மனோஜ் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், சிந்தாமணி புகழேந்தி, வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், டாக்டர் சரவணன், வெங்கடசாமி, ராஜேந்திரன், தொழிலதிபர்கள் ஜெய பால், ரஞ்சித், ஜெயமூர்த்தி , வானுார் முத்து, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிர்வாக மேலாளர் வழக்கறிஞர் கவுதமன், கபிலன் நன்றி கூறினர்.

