/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்ச் சங்கத்தின் விருது வழங்கும் விழா
/
தமிழ்ச் சங்கத்தின் விருது வழங்கும் விழா
ADDED : செப் 22, 2024 02:40 AM

திண்டிவனம்: திண்டிவனம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவியரங்கம், வாழ்த்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஏழுமலை வரவேற்றார். தொடர்ந்து நடந்த கவியரங்கத்தில் சென்னை ராஜ கருணாகரன், காமராசு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஓய்வு பெற்ற நீதிபதி சேது முருகபூபதி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மயிலம் தமிழ்க்கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அண்ணாதுரை விருதை டாக்டர் கணேசனுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி வழங்கினார்.
இதே போல் வ.உ.சி., ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா, பாரதி சுடர், திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது. தமிழ்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜானகிராமன், பேராசிரியர் ஞானஜோதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியை மேரி வினோதினி உட்பட பலர் பங்கேற்றனர்.