/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
/
இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
ADDED : செப் 20, 2024 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மரம் நடுவோர் சங்கம் சார்பில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம், மரங்களின் பயன்கள் மற்றும் பிளாஸ்டிக் தவிர்த்தல், இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், இயற்கையை பாதுகாப்போம் என விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், மஞ்சள் பைகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் முருகன், பெருமாள், தளிர் இயற்கை கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்னர்.