UPDATED : நவ 04, 2026 12:20 PM
ADDED : நவ 04, 2026 12:17 PM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம், பழனிவேலு ஐ.டி.ஐ., வளாகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
‘சிகரம் தொடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த முகாமிற்கு கண்டாச்சிபுரம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேசிய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ‘இளம் பருவத்தில் தேவையற்ற பழக்கவழக்கங்களுக்கு மாணவர்கள் தங்களை ஒப்புக்கொடுக்காமல் நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொண்டு தங்கள் துறையில் சிகரத்தை தொடும் அளவிற்கு உழைக்க வேண்டும்,’ என்றார்.
தொடர்ந்து பேசிய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் எளிதில் கடைபிடிக்க கூடிய நல்ல பழக்கவழக்கங்களை கூறினார். இதில் ஐ.டி.ஐ முதல்வர் நுார்முகமது, ஐ.டி.ஐ.,மேலாளர்கள் மஞ்சுளா, செல்லம்மாள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கணினி பயிற்சியாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஐ.டி.ஐ., ஊழியர்கள் செய்தனர்
