ADDED : ஜூலை 28, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:தனியார் கம்பெனியில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டிவனம் அருகே மேல்பேட்டையிலுள்ள கிரீன்லேம் தொழிற்சாலையில் நடந்த முகாமில், இ.எஸ்.ஐ., மேலாளர் லுார்துசாமி தொழிலாளர்கள் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.
முகாமில், தனியார் நிறுவனங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தனியார் கம்பெனியின் நிர்வாகிகள் சண்முகநாதன், விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.