ADDED : அக் 01, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.
முகாம் வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று 'துாய்மை பாரதம்' விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அனந்தராமன், கணினி ஆசிரியை உமா, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஜெயப்பிரியா, உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.