ADDED : அக் 20, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்,: உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் திண்டிவனத்தில் நடந்தது.
திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம், திண்டிவனம் தாலுகா அலுவலகத்திருந்து துவங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தாசில்தார் சிவா, இன்ஸ்பெக்டர் கீதா, தலைமையாசிரியை வளர் இந்திரா, அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.