/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
/
குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 21, 2024 12:22 AM
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு ஊராட்சித் தலைவர் ஸ்ரீதேவிரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கண்டாச்சிபுரம் எஸ்.ஐ.,க்கள் காத்தமுத்து, ஷாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிரேமலதா வரவேற்றார்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து விழிப்புணர்வு கோஷங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் முருகன், கலைச்செல்வி, தமிழழகன், அஞ்சலாதேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சைல்டு லைன் பணியாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

