
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், -திண்டிவனத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழகம் முழுதும் 35வது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி, திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோட்டில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சாணக்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் முக்கிய வீதிகள் வழியாக சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.