/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டாசு கடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
/
பட்டாசு கடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
பட்டாசு கடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
பட்டாசு கடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
ADDED : அக் 28, 2024 11:12 PM

விழுப்புரம் : விழுப்புரம் தீயணைப்புத் துறை சார்பில் பட்டாசு கடை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில், நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர்கள் ஜெயசங்கர், ஜமுனாராணி முன்னிலை வகித்தனர்.
பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் வெடிபொருள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை. தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். தொடர்ந்து, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.