/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு உதவித் தொகை பெற விழிப்புணர்வு கூட்டம்
/
அரசு உதவித் தொகை பெற விழிப்புணர்வு கூட்டம்
ADDED : டிச 28, 2025 05:23 AM

செஞ்சி: சண்டிசாட்சி கிராமத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குவதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலக பாதுகாப்பு அலுவலர் தர்மா விளக்கவுரையாற்றினார்.
அப்போது, பெற்றோரை இழந்த 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மத்திய அரசின் மிஷன் வட்சால்யா திட்டத்தில் மாதம் 4,000 ரூபாய் பெறுவதற்கும், தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்தில் மாதம் 2,000 ரூபாய் பெறுவதற்கும், தாயை இழந்து தந்தை மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தைகளும் இத்திட்டத்தில் பயன் பெற முடியும் என விளக்கினார்.
தொடர்ந்து, பயனாளிகளை தேர்வு செய்ய விணப்பங்கள் பெறப்பட்டது. செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவைச் சேர்ந்த பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாவலர்கள் பங்கேற்றனர்.

