ADDED : அக் 30, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்புத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் ராமசாமி வரவேற்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு, பாதுகாப்பு, முதலுதவி குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஏழுமலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.