ADDED : ஜன 12, 2025 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புகையில்லா போகி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில், புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி நகர்நல ஸ்ரீபிரியா, துப்புரவு அலுவலர் ராபர்ட், துப்புரவு ஆய்வாளர் மதன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்துகொண்டு புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, பொதுமக்கள் தூக்கி எறிய கூடிய பொருட்களை, பழைய பஸ் நிலையம் வார்டு அலுவலகத்தில் வாங்கும் மையம் திறந்து, பழைய பொருட்கள் வாங்கினர்.