/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 12, 2025 05:48 AM
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பேராசிரியர் அர்ச்சனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, நல்ல மனநலம் அனைத்து உடல் நலன்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானது தியானம் மற்றும் உடற்பயிற்சி. மனசோர்வு, பதற்றம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தினமும் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக வானுார் வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி, வட்டார வளர்சி பயிற்றுநர் அஸ்வினி சிறப்புரையாற்றினர். பேராசிரியர் கயல்விழி நன்றி கூறினார்.

