/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ADDED : டிச 11, 2025 06:29 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சியின் நிறைவாக முகாமில் கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பழனிவேலு ஐ.டி.ஐ தாளாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்டம் உதவி தொழிலாளர் நல ஆணையர் மீனாட்சி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஐ.டி.ஐ மேனேஜர் செல்லம்மாள் வரவேற்றார்.
கட்டுமான மேஸ்திரியாக தரம் உயர்த்தும் பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 நபர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் மீனாட்சி சான்றிழ்களை வழங்கினார்.இதில் விழுப்புரம் மாவட்ட அளவிலான கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பழனிவேலு மெட்ரிக் பள்ளியின் மேனேஜர் மஞ்சுளா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.