/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 16, 2026 06:43 AM
மயிலம்: மயிலம் எஸ்.எஸ்.பி.எஸ்., தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த விழாவிற்கு, செயலாளர் ராஜேஷ்குமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் மகாலட்சுமி வரவேற்றார்.
விழுப்புரம் மாவட்ட மகளிர் மைய பயிற்றுநர் அபிராமி, மகளிர் மேம்பாடு திட்ட நிர்வாகி எழிலரசி ஆகியோர் பெண்களுக்கான ஊட்டச்சத்தின் அவசியம், ஆரோக்கியம் குறித்து பேசினர்.
மயிலம் குறுவட்ட பயிற்றுநர் புவனேஸ்வரி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.

