/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 11, 2024 06:44 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் பேசுகையில், 'மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், வீட்டிற்கு செல்லும் போதும் ஆண்களிடம் தேவையில்லாமல் பேசக்கூடாது.
நன்கு படித்து பள்ளிக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும், ஆண்கள் யாரேனும் உங்களை கேலி கிண்டல் செய்தலோ அல்லது பின் தொடர்தாலோ காவல் நிலையத்திற்கும் கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள 1098 என்ற எண்ணிற்கு எந்நேரமும் மாணவிகள் புகார் அளிக்கலாம்' என்றார்.
உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.