ADDED : நவ 28, 2026 01:46 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சார்பில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை ஆலோசகர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இந்துமதி, குழந்தைகள் அவசர உதவி மைய பணியாளர் சாந்தி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தைத் திருமணம் தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.
