ADDED : ஜன 26, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர் : வானூர் அரசு கல்லூரியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு இளஞ்செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி ஊர்வலத்தை துவக்கி வைத்து, போதைப்பொருள் மாணவர்களின் சமூதாயத்தை எப்படி பாதிக்கிறது என்பது குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
கல்லூரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் மயிலம் ரோடு வழியாக காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.