ADDED : ஜூன் 26, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சூர்யா கல்வி குழுமம், சூர்யா பார்மசி கல்லுாரி சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஊர்வலத்திற்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து சென்றனர். ஊர்வலம், சிக்னலில் முடிந்தது.
கல்லுாரி பேராசிரியர்கள் மகிமை உபகாரவளன், கபிலன், முகமது ரபீக் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.