ADDED : ஆக 22, 2025 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட சமூக நலத்துறை. வருவாய்த்துறை, காவல்துறை, திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் அப்போலோ சமுதாயக் கல்லுாரி சார்பில் நகராட்சி பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்தை சப் கலெக்டர் ஆகாஷ், டி.எஸ்.பி., பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதேகொம் பெண்கள் மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். ஊர்வலத்தில் போதை ஒழிப்பு தொடர்பாக கோஷம் எழுப்பிச் சென்றனர். தொடர்ந்து உறுதிமொழியேற்றனர்.
தாசில்தார் யுவராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன். சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் ராதா. தமிழரசி உட்பட பலர் பங்கேற்றனர்.