
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக இருதய தின விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி இருதய விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
கல்லுாரி அரங்கில் நடந்த இருதயம் குறித்த வினாடி வினா, ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். முன்னதாக இருதயவியல் துறை தலைவர் முகமது ரபீக் பாபு வரவேற்றார்.
ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துணை முதல்வர் தாரணி, மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, சீனியர் டாக்டர் ரங்கநாதன், துறை தலைவர்கள் சுப்பிரமணி, அசோக்குமார், பாபு, கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செவிலியர் உமா நன்றி கூறினார்.