நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மானுாரில் சுகாதார கழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில்,மானுாரில் சுற்றுச்சூழல் சுகாதார கழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளியின் திட்ட அலுவலர் லல்லி அலெக்ஸாண்டினாள், உதவி திட்ட அலுவலர் சசி முன்னிலை வகித்தனர்.
பேரணியில், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், மானுார் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன் மற்றும் மானுார் ஊராட்சி துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

