/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
/
பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 25, 2025 04:44 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில், பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
திண்டிவனம் சமுத்திரகனி திருமண மண்டபத்தில், பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராஜீ முன்னிலை வகித்தனர். சங்க சட்டதிட்டங்கள் குறித்து வழக்கறிஞர் ஜீவா பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் பேட்ச் வழங்கி சிறப்புரையாற்றினார்.
திண்டிவனத்தில் புதியதாக திறக்கப்பட உள்ள நகராட்சி பஸ் நிலையத்தில், பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்திற்கு தனி ஸ்டேண்டு ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன், டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

