தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


UPDATED : அக் 09, 2026 06:29 PM

ADDED : அக் 09, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 06:29 PM ADDED : அக் 09, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: வானுார் வருவாய்த்துறை சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.

இந்த பேரணியை தாசில்தார் லட்சாதிபதி துவக்கி வைத்தார். மண்டல துணை தாசில்தார் வெங்கடபதி முன்னிலை வகித்தார். இந்த பேரணியில், தனியார் கல்லுாரியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது கல்லுாரி மாணவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

அதில் அரசு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பான தகவல்களை பெறுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் தாலுகா அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us