ADDED : செப் 15, 2025 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: சாலை படுமோசமாக உள்ளதால் வாகனங்களை ஓட்டி செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின் றனர்.
கண்டமங்கலம் ஒன்றியம், சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தில் இருந்து சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்திற்கு விவசாய விளை பொருட்களை ஏற்றி கொண்டு தினந்தோறும் டிப்பர் டிராக்டர் உள்பட பல வாகனங்கள் செல்கின்றன. மேலும் பஸ்கள், சுற்றுலா வேன்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவைகளும் சென்று வருகின்றன. இந்த சாலை க டந்த பல மாதங்களாக பயணிக்க லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக படு மோசமாக உள்ளது.
மழைக்காலங்களில் பள்ளங்களில் நீர் நிரம்பியுள்ளதால், வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
அதிகாரிகள் இந்த சாலையை துரிதமாக சீரமைப்பதற்கான நடவடிக் கையை எடுக்க வேண்டும்.