/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் இறகு பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா
/
விழுப்புரத்தில் இறகு பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா
விழுப்புரத்தில் இறகு பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா
விழுப்புரத்தில் இறகு பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மே 03, 2025 05:04 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த இறகு பந்தாட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழுப்புரம் சதா பேட்மிட்டன் அகாடமி சார்பில், இன்ட்ரா கிளப் டோர்னமென்ட் இறகுபந்தாட்ட போட்டிகள் கடந்த 27ம் தேதி நடந்தது.
இதில், டபுள்ஸ், சிங்கிள் பிரிவுகளில், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என தனித்தனியாக போட்டிகள்நடந்தது.
இறகு பந்தாட்ட கழக செயலாளர் சீனியர் பயிற்சியாளர் பாபு சதாசிவம், பயிற்சியாளர் கமலேஷ் உள்ளிட்ட குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளையாடினர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சங்கர், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.