/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு விழா
/
பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு விழா
ADDED : மே 16, 2025 11:15 PM

திண்டிவனம்: திண்டிவனம் ஸ்ரீ பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் கடையை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
திண்டிவனம் நேரு வீதி, தாலுகா அலுவலகம் எதிரில், புதுப்பொலிவுடன் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், பர்னிச்சர்ஸ், பாத்திரங்கள் கடையின் திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை, ஸ்ரீ பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் கடையின் உரிமையாளர் சேகர் வரவேற்றார்.
திறப்பு விழாவில், வணிகர் சங்க பிரமுகர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.