ADDED : ஏப் 22, 2025 04:45 AM

திண்டிவனம்: திண்டிவனம், பட்டணம், புறவழிச்சாலையில் ஸ்ரீ பாலாஜி உரக்கடை திறப்பு விழா நடந்தது.
அ.தி.மு.க., விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி, திறந்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி முன்னிலை வகித்தனர்.
உரைக்கடை உரிமையாளர், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் பாலாஜி வரவேற்றார். அ.தி.மு.க., நிர்வாகிகள், பிரமுகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.
கடையின் உரிமையாளர் பாலாஜி கூறுகையில், 'புதிதாக திறக்கப்பட்டுள்ள கடையில் நெல், கரும்பு, தர்பூசணி, வேர்க்கடலை, உளுந்து, எண்ணெய் வித்து பயிர்கள், மரப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மல்லி போன்ற பயிர்களுக்கு தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.
மேலும், அனைத்து முன்னணி நிறுவனங்களின் புதிய ரக உரங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு உள்ளது.
கடையில் விதை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து வாங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு சிறந்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்' என்றார்.